ஆபாச படம் எடுத்து மிரட்டிய அமெரிக்க கவர்னர் கைது

தினமலர்  தினமலர்
ஆபாச படம் எடுத்து மிரட்டிய அமெரிக்க கவர்னர் கைது

சிகாகோ: அமெரிக்காவின், மிசோரி மாகாண கவர்னர், அனுமதியின்றி ஒரு பெண்ணை, அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதை வெளியிடப் போவதாக மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின், மிசோரி மாகாண கவர்னராக, எரிக் கிரேய்டன்ஸ் உள்ளார். இவர், பதவிக்கு வரும் முன், பெண் ஒருவருடன், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது.அந்த பெண்ணை, அவரது அனுமதியின்றி, அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். அதன்பின், கவர்னராக பதவியேற்ற எரிக், தன்னுடனான உறவு பற்றி வெளியில் சொன்னால், புகைப்படங்களை வெளியிடுவதாக, அப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்.இதனால், சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நிருபர்களிடம் பேசிய, எரிக் கிரேய்டன்ஸ், ''அந்த பெண்ணுடன், எனக்கு உறவு இருந்தது உண்மையே. ஆனால் அவரை, நான் மிரட்டவோ, துன்புறுத்தவோ இல்லை,'' என்றார்.இது தொடர்பான புகாரை விசாரித்த போலீசார், எரிக்கை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது, எரிக்கை, நிபந்தனை ஜாமினில், நீதிபதி விடுவித்தார். இந்த வழக்கு, மார்ச், 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை