அதிதிராவ் புதிய படம் லோகோ வெளியீடு

தினமலர்  தினமலர்
அதிதிராவ் புதிய படம் லோகோ வெளியீடு

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிராவ். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் மல்டி ஹீரோ படத்திலும் நடிக்கிறார். தெலுங்கிலும் நடித்து வரும் அதிதிராவ், இந்திராகாந்தி மோகன கிருஷ்ணா இயக்கி வரும் சம்மோஹனம் என்ற படத்தில் நடிக்கிறார்.

சுதீர்பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், நேற்று டைட்டீல் மற்றும் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கவர்ச்சி காட்சிகளை நடித்துள்ள அதிதிராவ் ஹைதரி, உதட்டு முத்தக்காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

மூலக்கதை