தற்செயலாக படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வு: தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுகள்

தினகரன்  தினகரன்

அர்ஜென்டினா: விண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதரும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுபவர். கடந்தாண்டு செப்டம்பரில் தனது வானியல் தொலைநோக்கியில் கேமராவை பொருத்தி சோதனை செய்துள்ளார். பூமியிலிருந்து 6 கோடியே 5 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள என்.ஜி.சி.613 என்ற விண்மீன் திரளை நோக்கி கேமரா வைக்கப்பட்டது. அந்த கேமரா அதிகாலை 1.30 மணியிலிருந்து 3 மணிவரை 90 நிமிடங்களுக்கு 20 வினாடிகள் இடைவேளையில் படங்களை எடுத்துள்ளது. அதில் முதல் 45 நிமிடங்கள் கழித்து பதிவான 40 படங்களில் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வு படிப்படியாக பதிவாகியுள்ளது. சூப்பர்நோவாவின் தொடக்க நிமிடங்களை தன்னார்வலர் ஒருவர் கேமரா மூலம் பதிவுசெய்திருப்பது மிகவும் அறிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை