சிரியா அரசுப் படை தாக்குதல்: 5 நாட்களில் 400க்கும் மேற்பட்டோர் பலி

தினகரன்  தினகரன்

டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில்  400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவு படையினர் கடந்த 5 நாட்களாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவியை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி போராளிகளை விரைவில் அழிக்கும் நோக்கில் அரசு தரப்பு கூட்டுபடையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் தொடர் வான் தாக்குதல்களை நடத்தினர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் ஓயாது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 403 பேர் பலியாகி உள்ளனர். இதில் 95 குழந்தைகளும் அடங்குவர்.

மூலக்கதை