பெங்களூர் பிக்பாஸ் வீட்டில் தீவிபத்து: 8 கோடி சேதம்

தினமலர்  தினமலர்
பெங்களூர் பிக்பாஸ் வீட்டில் தீவிபத்து: 8 கோடி சேதம்

ஸ்டார் டி.வி குழுமம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழி சேனல்களில் தனது நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. அதேபோன்று கன்னட மொழியில் நடத்துவதற்கு பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீட்டை அமைத்துள்ளது.

இந்த பிரமாண்ட வீட்டில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. பிக்பாஸ் வீடு எடை குறைவான பலகைகள் மற்றும் தெர்மாகூல் வைத்து கட்டப்பட்டிருந்ததால் தீ மள மள வென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. உடடினாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். என்றாலும் பிக் பாஸ் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. சேத மதிப்பு சுமார் 8 கோடி என்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து பிடதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை