புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் சுவிஸ்!

PARIS TAMIL  PARIS TAMIL
புலம்பெயர்ந்தோரை மோசமாக நடத்தும் சுவிஸ்!

புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை சுவிட்சர்லாந்து மோசமாக நடத்துவதாக Amnesty International என்னும் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 
புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை அபாயகரமான நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதன்மூலம் சுவிட்சர்லாந்து சர்வதேச நெறிமுறைகளை மீறி வருவதாக வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
 
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டோர் மற்றும் முறையான ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் அபாயமுள்ள இலங்கை, துருக்கி மற்றும் சூடான் போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளது.
 
உலகிலுள்ள 159 நாடுகளின் மனித உரிமைகள் குறித்த Amnesty Internationalஇன் அறிக்கையில், பல புகலிடம் தேடுவோர் தங்கள் குடும்பங்களை சுவிட்சர்லாந்தில் விட்டு விட்டு Dublin ஒழுங்குமுறையின்கீழ் உள்ள மற்ற Schengen நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த கரிசனை இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Dublin Conventionஇல் கொடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியனின் விதிகளின்படி, புகலிடம் தேடுவோரின் விண்ணப்பங்கள், அவர்கள் எந்த நாட்டிற்கு முதலாவது வந்தார்களோ அங்குதான் பரிசீலிக்கப்படவேண்டும்.
 
மேலும் சுவிட்சர்லாந்தின் வலது சாரி Swiss People’s Party என்னும் கட்சி முன் வைத்துள்ள ஒரு initiative குறித்தும் Amnesty International கவலை தெரிவித்துள்ளது.
 
அதாவது அந்த கட்சி சர்வதேச சட்ட விதிமுறைகளை விட சுவிஸ் சட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்கிறது, சுவிஸ் அரசும் இதை கடுமையாக விமர்சித்துள்ளது.

மூலக்கதை