காவிரி பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்க ஒன்று ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
காவிரி பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்க ஒன்று ..

காவிரி பிரச்சினையில் கர்நாடகக் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு ஒரே அணியில் நிற்கிறார்கள், ஆனால் தமிழக கட்சிகள் எதிர் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக பார்த்து ஒவ்வொருவரும் எதிரும் புதிருமாக இயங்குகிறார்கள். இதனால் காவிரிப் பிரச்சினையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம் ..

 

எதிர் கட்சிகள் மாற்று சித்தாந்தங்களை, கருத்துகளை கொண்டிருக்கலாம், கடுமையாக விவாதிக்காலாம் என்றாலும், மனித மாண்புடன் ,தமிழக நலனில் ஒருமித்து ஒரு மேசையில் அமர்ந்து தமிழகத்தின் கோரிக்கையை ஒருமுகப்படுத்தவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

 

இந்த அதிசயம் தமிழகத்தில் நடந்தேறியது வரவேற்கத் தக்க ஒன்று .. முதலில் அரசியல் கலாச்சாரம் மாறுவது அவசியம் ... அதன்பின் இரும்புக் கோட்டைகளாக விளங்கும் கட்சிகள் மக்கள் குறைகளை கேட்டு செயல்படுவது தானாக நடைபெறும் ..

 

தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சித் தலைவர்கள், எதிர் கருத்துகளை கொண்ட அனைவரும், விவசாய அமைப்புகளை அழைத்து ஒற்றுமையுடன் கூடி பேசியது கண்டு தமிழக அரசியல் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்பதை காண முடிகிறது ... வாழ்த்துகள் ... தொடரட்டும் இதுபோன்ற பண்பட்ட அரசியல் அடிப்படை மாண்புகள் ..

 

அரசியலில் இறுக்கங்கள் குறைய ஆரம்பித்துள்ளன.

 

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதால், உச்சநீதிமன்ற ஆணை மீண்டும் மீறப்படும் வாய்ப்புகள் அதிகம் .. தமிழக கட்சிகள் தங்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, காவிரி நீருக்காக, நம் மாநில உரிமையை மீட்டெடுக்க கைகோர்த்து செயல்படவேண்டியது மிக அவசியம் ... அறம் வெல்லும் ..

மூலக்கதை