எச்1பி விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: எச்1பி விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையை பெறும் நிறுவனங்களுக்கு \'ஆன் சைட்\' பணி என்ற பெயரில் ஊழியர்களை அனுப்பிவைக்கின்றன. பழைய நடைமுறைப்படி \'ஆன் சைட்\' செல்லும் ஊழியர்களுக்கு எச்1பி விசாவுக்கு விண்ணப்பித்தாலும் 3 ஆண்டுகள் என்ற குறைந்தபட்ச கால அளவிற்கு இந்த விசாக்கள் செல்லுபடியாகும். விசா காலத்தில் எவ்வளவு பணி இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் புது விதிமுறைகளின்படி ஆன் சைட்டிற்கு ஊழியர்களை அனுப்பும்போது விசாகாலம் முழுவதுக்கும் ஊழியர்களுக்கு உள்ள பணிகள் குறித்து பட்டியலிட வேண்டும். விசா கோரும் காலம் முழுவதும் விண்ணப்பதாரர் அதே நிறுவனத்தில் ஊழியராக இருப்பதையும் மென்பொருள் நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும். இதேபோன்று விசாகாலத்தில் பணி ஒப்பந்தம் ஆன் சைட் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டால், அந்த பணியாளருக்கு விசா நீட்டிப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை