தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நிறைவு அளிக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நிறைவளிக்கு வகையில் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு பற்றி தெளிவு ஏற்படும் வகையிலும், முதல்முறையாக பாகிஸ்தானை அதன் செயல்களுக்கு பொறுப்பாகும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் துணை செய்தி தொடர்பாளர் ராஜ்ஷா தெரிவித்திருக்கிறார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த அமைப்பை சேர்ந்த தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராஜ்ஷா தெரிவித்தார். இதனிடையே தெற்காசிய மண்டல பாதுகாப்பு சார்ந்தும் தன்னுடைய நலன்கள் சார்ந்தும் செயலாற்றுவதற்கு பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அந்த நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கருதுவதாக செய்தித்தொடர்பாளர் டயானா வைட் கூறியுள்ளார்.     

மூலக்கதை