சீனாவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது : 10,000 க்கும் மேற்பட்ட கார்கள் இரவு பகலும் சாலையில் தவிப்பு

தினகரன்  தினகரன்

பெய்ஜிங் : சீனாவில் ஹைனான் மாகாணத்தில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக கப்பல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் ஹைனான் பகுதிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மொத்தமும் துறைமுகங்கள் அருகே உள்ள சாலையில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கடும் பனி மூட்டம் காரணமாக ஹைனான் மாகாணத்திற்கு செல்ல வேண்டிய கப்பல் போக்குவரத்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஹைனான் தீவுக்கு செல்ல வேண்டிய சுமார் 11,000க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் துறைமுகங்கள் அருகே உள்ள சாலையில்  நிறுத்தப்பட்டதில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒரு இரவு முழுவதும் சாலையிலேயே பொழுதை கழித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி காலை விடிந்த பின்னரே கப்பல் போக்குவரத்து துவங்கியதாகவும், ஆனால் போக்குவரத்து நெரிசல் குறைய வெகு நேரமானதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை