காற்று மாசுபாட்டை குறைக்க ஜெர்மனியில் விரைவில் இலவச பொதுபோக்குவரத்து

தினமலர்  தினமலர்
காற்று மாசுபாட்டை குறைக்க ஜெர்மனியில் விரைவில் இலவச பொதுபோக்குவரத்து

பெர்லின் : கார்களின் தேசமான ஜெர்மனியில், காற்று மாசுபாட்டை குறைக்க போன், எசென், மான்ஹெய்ம், மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட 5 நகரங்களில் இலவச பொதுபோக்குவரத்து குறித்த சோதனை முயற்சிக்கு திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 8 நாடுகள் வளிமண்டலத்தில் நைட்ரஜன் டைஆக்சைடு மற்றும் அதன் பகுதி்ப்பொருட்களின் விகிதம் குறைப்பு விவகாரத்தில் முக்கிய தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு, ஜெர்மனி சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இலவச பொதுபோக்குவரத்து குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதை, பத்திரிகையாளர்களுக்கு ஜெர்மனி சுற்றுலாத்துறை அமைச்சர் பார்பரா ஹென்டிரிக்ஸ் தலைமையிலான அமைச்சர்கள் குழு விவரித்தது.

அதன்படி, நாட்டு மக்கள் தங்களது சொந்த வாகனங்களின் பயன்பாட்டை சிறிதுசிறிதாக குறைக்கும்வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரங்கள், முன்னாள் தலைநகரான போன், தொழிற்சாலைகள் மிகுந்த நகரமான எசென் மற்றும் மான்ஹெய்ம் உள்ளிட்ட 5 நகரங்களில் இந்த ஆண்டின் இறுதியில், இலவச பொதுபோக்குவரத்திற்கான சோதனை முயற்சி நடைபெற உள்ளது.

மக்களுக்கு தூய்மையான காற்று என்பதில் உறுதி கொண்டுள்ள ஜெர்மனி அரசு, காற்று மாசுபாட்டை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க முன்வந்துள்ளது. இதில், அரசின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் மட்டுமல்லாது அதிகபட்ச அபராதமும் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை