சிரியாவில் கொடூரத் தாக்குதல் : கொத்து கொத்தாக மடியும் மக்கள்....10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் அதிகளவில் பலி

தினகரன்  தினகரன்

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவு படையினர் கடந்த 3 நாட்களாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவியை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி போராளிகளை விரைவில் அழிக்கும் நோக்கில் அரசு தரப்பு கூட்டுபடையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் தொடர் வான் தாக்குதல்களை நடத்தினர். கூத்தா, டூமா, மிஸ்ராபா உள்ளிட்ட இடங்களில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிரியா அரசு படையினர் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.     மருத்துவமனை மீது தாக்குதல்சிரியாவின் கவுடா பகுதியில் கடந்த இரு வாரமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பசாம் வேதனையுடன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, கவுடாவில் பேரழிவு நடந்துக் கொண்டிருக்கிறது. எங்களிடம் மருத்து, உணவு, தங்க இடம் என்று ஏதுவும் இல்லை. அவர்கள் அனைத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை