எம்.பி.,யாகும் தலித் பெண்: பாக்.,கில் இது முதல் முறை

தினமலர்  தினமலர்
எம்.பி.,யாகும் தலித் பெண்: பாக்.,கில் இது முதல் முறை

லாகூர்:அண்டை நாடான பாகிஸ்தானில், முதல் முறையாக பார்லிமென்டுக்கு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த, தலித் பெண். தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பாகிஸ்தானில், பார்லி., மேல்சபைக்கு சிந்து
மாகாணத்தில் உள்ள தொகுதிக்கு வரும் மார்ச், 3ல், தேர்தல் நடக்க உள்ளது.இதில், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, தலித் பெண், கிருஷ்ண
குமாரி கோல்ஹி, 39, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் எம்.பி.,யாவது உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில், எம்.பி.,யாகும், ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல், தலித் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
பாக்., மக்கள் கட்சியின் சார்பில்தான் இதுவரை, முஸ்லிம் அல்லோதோர் நான்கு பேர், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது கோல்ஹியுடன், கிறிஸ்தவர் ஒருவரையும், மற்றொரு தொகுதிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.சிந்து மாகாணத்தில் பிறந்த கோல்ஹியின் குடும்பம், மிகவும் வறுமையில் வாடியது. அவர்கள் வசித்த நிலத்தின் உரிமையாளரால், மூன்று ஆண்டுகளுக்கு மேல், இவர்களது குடும்பத்தினர், தனியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, கோல்ஹி 3ம் வகுப்பு படித்தார். தன், 16 வயதில் திருமணம் செய்த அவர், சமூகவியலில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்த அவர், படிப்படியாக உயர்ந்து, தற்போது, எம்.பி.,யாக உள்ளார்.

மூலக்கதை