அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேச்சு

மதுரை ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பேசியதாவது:

எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைதான் மக்கள் நீதி மய்ய கட்சிக்கும்.  நியாயப் போரின் தமிழர் படை இது.   நான் யாரென்று புரிந்து கொண்டதால் உங்களுடன் இணைகிறேன். லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் மதுரை கூட்டம்.

எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும்.  டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எங்களின் வேகத்தை கூட்டியுள்ளார், இன்றே என் பிரசாரத்தை துவக்க வைத்துவிட்டார்.

 பொறுத்தது போதும், இனி செயலை தொடங்குங்கள் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வி, சாதி விளையாட்டுக்கள் நிறுத்தப்படும்.  ஊழலை  குறைத்தால் மின்சாரம் வரும்.

நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். நல்ல கட்சிக்கு வாக்களித்திருந்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ6 லட்சம் கிடைத்திருக்கும். ஓட்டின் மதிப்பு தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள்.

படித்த இளைஞர்கள் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை ஒழிக்கப்படும். நாங்கள் விஞ்ஞானிகளாக வரவில்லை, சமூக சேவகர்களாக வந்துள்ளோம்.

உங்கள் எல்லா பற்றாக்குறையும் பேராசையால் வந்தது. சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்.

ரூ,6000 வாங்கிக்கொண்டு ஆண்டு முழுவதும் சும்மா இருந்துவிட முடியாது.

என்னுடன் முடியும் கட்சி அல்ல, குறைந்தது 3, 4 தலைமுறையாவது தாக்குப்பிடிக்கும்.

தராசின் நடுமுள் நாம், எந்த பக்கமும் சாயமாட்டோம். அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன்.

மக்களையும் நீதியையும் மையமாக கொண்டது மக்கள் நீதி மய்யம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை