ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்

தினகரன்  தினகரன்

ஜெர்மனி: ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை, அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெர்மனியில் 9 மாத குழந்தையுடன் காரில் சென்ற கேசி ஆண்டர்சன் என்ற இளம் பெண் எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் சிக்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் ஆபத்து காலங்களில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த 911 என்ற எண்ணை அழுத்தியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் பலத்த காயமடைந்த கேசி ஆண்டர்சனுக்கு   மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக அவரது குழந்தை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.இந்த விபத்து நிகந்தபோது கேசி ஆண்டர்சன் ஆப்பிள் கை கடிகாரம் உதவியுடன் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அளித்த அவசர தகவலில் கூறியுள்ளதாவது விபத்துக்குள்ளானதும் எனது காரிலிருந்து பொருட்கள் அனைத்தும் மேலே பறந்தன. நான் காரின் ஸ்டியரிங்கில் முட்டியதால் எனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. நான் எதை பார்த்தாலும் கறுப்பாகவே தெரிகின்றன. எனது கைகளின் உதவியுடன் எனது போனை எடுத்தேன், எதுவும் தெரியாததால் போனை உபயோகிக்க முடியவில்லை. அதன் பின்னர் தான் எனது ஆப்பிள் கை கடிகாரம் உதவியுடன் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டேன் என கூறியுள்ளார். 

மூலக்கதை