லாராவை பின்தள்ளி முன்னிலை பெற்ற விராட் கோஹ்லி!

PARIS TAMIL  PARIS TAMIL
லாராவை பின்தள்ளி முன்னிலை பெற்ற விராட் கோஹ்லி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாராவை பின்தள்ளி விராட் கோஹ்லி முன்னிலை பெற்றுள்ளார்.
 
சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் 909 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ள கோஹ்லி, சர்வதேச பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
அதன்படி, இதுவரை 908 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலிருந்து லாரா எட்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
 
அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் 931 புள்ளிகளுடன் 2ஆவது இடம், அவுஸ்ரேலியாவின் கிரேக் சேப்பல் 921 புள்ளிகளுடன் 3ஆவது இடம், இங்கிலாந்தின் டேவிட் கோவர் 919 புள்ளிகளுடன் 4ஆவது இடம் என இந்த பட்டியல் நீடித்துச் செல்கிறது.
 

மூலக்கதை