ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்கப்படும் நூலகம்! - திறந்து வைத்த இம்மனுவல் மக்ரோன்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்கப்படும் நூலகம்!  திறந்து வைத்த இம்மனுவல் மக்ரோன்!

மாலை நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் நூலகம் ஒன்றினை நேற்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திறந்துவைத்தார். 
 
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் கலாச்சார அமைச்சர் Françoise Nyssen ஆகியோர் இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக உள்ளூர் அதிகாரிகளால் அழைக்கப்ப்ட்டிருந்தனர். Yvelines இல் உள்ள Les Mureaux நூலகத்துக்கு சென்றிருந்த மக்ரோன் மற்றும் அமைச்சர் அங்கிருப்பவர்களுடன் உரையாடினார்கள். 
 
மக்ரோன் தெரிவிக்கும் போது, 'நூலகம் என்பது விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி!' என குறிப்பிட்டார். பிரான்சில் நூலகம் ஒன்று சராசரியாக வாரத்துக்கு 41 மணிநேரங்கள் மாத்திரமே திறக்கப்படுகிறது எனவும், டென்மார்க்கின் Copenhagen நகரில் வாரத்துக்கு 91 மணிநேரங்கள் திறக்கப்படுகிறது எனவும் கலாச்சார அமைச்சரின் உதவியாளர்கள் Erik Orsenna மற்றும் Noël Corbin ஆகியோர் தகவல் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள 16,500 நூலகங்களில், 130 நூலகங்கள் மாத்திரமே ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படுகின்றன. இவை கணிசமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை