இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையே இன்று 2வது ‛டி-20'

தினமலர்  தினமலர்
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையே இன்று 2வது ‛டி20

செஞ்சூரியன்: இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ‛டுவென்டி-20' போட்டி இன்று(பிப்.,21) நடக்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ‛டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இன்று இரண்டாவது போட்டியில் பங்கேற்கிறது. செஞ்சூரியனில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைபற்றும். இன்று செஞ்சூரியனில் இடியுடன் மழை பெய்ய 100 சதவீத வாய்ப்புள்ளதால் போட்டியில் பாதிப்பு ஏற்படலாம்.

மூலக்கதை