அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய தூதருக்கு பாக்., 'சம்மன்'

தினமலர்  தினமலர்
அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய தூதருக்கு பாக்., சம்மன்

இஸ்லாமாபாத்: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், எட்டு வயது சிறுவன் பலியானதாக, நம் துாதரை வரவழைத்து, பாக்., கண்டனம் தெரிவித்துள்ளது.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில், இந்திய படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது நடந்த சண்டையில், எட்டு வயது சிறுவன் பலியானதாகவும், பாக்., நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த சண்டை யில், இரு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை, மத்திய அரசு மறுத்தது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கான நம் துாதர், ஜே.பி.சிங்கை நேற்று வரவழைத்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அப்போது, பாக்., தரப்பில் கூறப்பட்டதாவது:கடந்தாண்டு மட்டும், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, 2,003 முறை, இந்திய படைகள் தாக்குதல் நடத்தின. இந்த ஆண்டில், இதுவரை, 335 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; 65 பேர் காயமடைந்தனர். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு, பாக்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை