Charenton-le-Pont - காவல்துறை அதிகாரியை மோதிவிட்டு தப்பிச்சென்ற மகிழுந்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
CharentonlePont  காவல்துறை அதிகாரியை மோதிவிட்டு தப்பிச்சென்ற மகிழுந்து!!

Val-de-Marne இன் Charenton-le-Pont இல், நேற்று திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை மகிழுந்து ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளது. சாரதி தேடப்பட்டு வருகிறார். 
 
Charenton-le-Pont (Val-de-Marne) காவல்நிலையத்தின் பயிற்சி காவல்துறை அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதிகாரி மகிழுந்தை மறிக்க முற்பட்ட வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாரியை மோதிவிட்டு தப்பிச்சென்ற மகிழுந்தை இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் மகிழுந்து சாரதி தப்பிச்சென்றுள்ளார். 
 
காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில எலும்பு முறிவுகளுக்கு அதிகாரி ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை