உற்சாகத்தில் காஜல் அகர்வால்

PARIS TAMIL  PARIS TAMIL
உற்சாகத்தில் காஜல் அகர்வால்

  தமிழில் விஜய், அஜித்துடன் நடித்து விட்டு தெலுங்கிற்கு சென்ற காஜல் அகர்வால், நானி தயாரித்த, அவே படத்தில் நடித்தார். பெண்களை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் காஜலுடன் நித்யா மேனன், ரெஜினா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். கடந்த வாரம் வெளியான இந்த படம் ஆந்திரா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூல் சாதனை செய்து வருகிறது.

 
அந்த வகையில், முதல் வார இறுதியில் அரை மில்லியன் டாலர் வசூல் செய்த அவே படம், விரைவில் ஒரு மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்து விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த படத்தை தயாரித்துள்ள நானி மகிழ்ச்சியில் உள்ளார்.
 
அதேபோல் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ள காஜல் அகர்வால், 2018ம் ஆண்டு நல்லதொரு துவக்கமாக அமைந்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். அவே படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
 

மூலக்கதை