அவதானம் - இன்று இல்-து-பிரான்சுக்குள் வாகனங்கள் மீது புதிய கட்டுப்பாடு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்  இன்று இல்துபிரான்சுக்குள் வாகனங்கள் மீது புதிய கட்டுப்பாடு!!

இன்று திங்கட்கிழமை பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
வேகமாக மாசுபட்டு வரும் இல்-து-பிரான்சுக்குள், அதன் அளவை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு மாற்றங்கள் இன்று பரிஸ் காவல்துறையினரால் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 130கி.மீ வேகத்துக்கு பதிலாக 110 வேகத்தை பயன்படுத்தும் படியும், 110 கி.மீ வேகம் கொண்ட சாலைகளில் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. தவிர 90 கி.மீ வேகம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் சாலைகளில் 70 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, பொதுமக்கள் வெப்பத்துக்காக மரக்கட்டைகளை எரிப்பதை இன்று ஒருநாள் தவிர்க்கும்படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை