அப்பாவுடன் அரசியலில் பயணிக்கும் திட்டமில்லை: ஸ்ருதிஹாசன்

தினமலர்  தினமலர்
அப்பாவுடன் அரசியலில் பயணிக்கும் திட்டமில்லை: ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரமாக இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் கட்சி பெயர், கொடி, கொள்கை அறிவிக்க இருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். கமல் அரசியலில் குதிப்பது பற்றி அவரது குடும்பத்தினர் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மட்டும், "கமல் நல்லவன் அவனுக்கு அரசியல் சரிப்பட்டு வராது. நடிகன் என்பதால் கூட்டம் சேருமே தவிர அது ஓட்டுக்களாக மாறாது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது கமலின் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: அப்பாவின் அரசியல் பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள். அவருடைய அரசியல் பயணத்துக்கு எனது முழு ஆதரவு உண்டு. ஆனால் எனக்கு அரசியல் தெரியாது. அரசியலில் அப்பாவுடன் பயணிக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு படப்பிடிப்பு இருப்பதால் ராமேஸ்வரத்திற்கோ, மதுரை கூட்டத்திற்கோ செல்லவில்லை என்றார் ஸ்ருதி.

மூலக்கதை