பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து

தினமலர்  தினமலர்
பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து

பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில் நடந்த மாபெ­ரும் ஊழல் வெளி­வந்­த­தும், பங்­குச் சந்­தை­யில் அந்த பங்­கின் விலை தொடர்ந்து சரிந்­தது. அனைத்து பொதுத் துறை வங்கி பங்­கு­களின் விலை­யும் சரிந்து, ஒட்­டு­மொத்த வங்கி துறை­யின் எதிர்­கா­லம் மீது, ஒரு கேள்­விக்­கு­றியை எழுப்­பி­யுள்­ளது. முத­லீட்­டா­ளர்­கள் அடுத்து என்ன செய்­ய­லாம் என்ற ஆழ்ந்த கவ­லை­யில் மூழ்கி உள்­ள­னர்.
இந்த நேரத்­தில், வங்கி துறை பங்­கு­களை எப்­படி அணுக வேண்­டும்? முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, இந்த ஊழல், ஒரு அவ­ச­ர­நி­லை­யாக அமை­யுமா? பொதுத் துறை வங்கி ஊழல்­க­ளுக்கு தீர்வே இல்­லையா? ரிசர்வ் வங்­கிக்­கும், அர­சுக்­கும் இந்த ஊழல் ஏற்­ப­டுத்­தும் சிக்­கல்­கள் எத்­த­கை­யவை? இப்­படி பல கேள்­வி­கள் கவ­லை­களாக மாறி­யுள்ளன.ஆட்சி பொறுப்­பா­ளர்­கள் எப்­போ­துமே கேள்­விக்கு ஆளா­வது இயற்­கையே. முத­லீட்­டா­ளர் கோபம் முழு­வ­தும் ஆட்சி பொறுப்­பா­ளர் பக்­கம் பாய்­வது, சந்­தை­யில் எதிர்­பார்க்­கப்­பட்ட இயல்­பான நிலைப்­பாடு.
வங்கி துறை சார்ந்த பிரச்­னை­கள், கடந்த பல ஆண்­டு­க­ளாக இருந்த போதும், அவை கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக விஸ்­வ­ரூ­பம் எடுக்­கத் துவங்கி இருப்­பதை மறுக்க முடி­யாது.ரிசர்வ் வங்­கி­யும், அர­சும் இந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, தொடர்ந்து வழி­மு­றை­களை வகுத்து அமல்­ப­டுத்தி வரு­வது அனை­வ­ரும் அறிந்­ததே.இருந்­தும், ஒரு சிக்­கலை தீர்த்து வைக்­கும் முயற்சி முன்­னேற்­றம் காணும் போது, இன்­னொரு புதிய பிரச்னை உரு­வெ­டுத்து, புதிய நிர்ப்­பந்­தங்­களை சுமத்­து­வது நம் வர­லாற்­றில் ஒரு அசா­தா­ரண சூழலை ஏற்­ப­டுத்தி விடு­கிறது.
இதைத் தாங்­கிக்­கொள்­ளும் மனோ­தி­டம் எல்லா முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் இருக்­காது. அர­சை­யும், ரிசர்வ் வங்­கி­யை­யும் முத­லீட்­டா­ளர் தரப்­பில் இருந்து, ஆய்­வா­ளர்­கள் பல கேள்­வி­களை கேட்­கத் துவங்­கி­யுள்­ள­னர்.இந்த ஊழல் விசா­ரணை நிலை­யில் உள்­ள­தால், இது பற்­றிய குறிப்­பான தக­வல்­கள் எளி­தில் வெளி­வ­ராது. ஆனால், இந்த சூழ­லில் வெளிப்­ப­டைத் தன்­மை­யோடு செயல்­ப­டு­வது மட்­டுமே, அர­சின் மதிப்­பைக் காப்­பாற்­றும்.அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்­றம், மக்­கள் மன­தில் மீண்­டும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும். அந்த நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும் அவ­சர தேவை அர­சுக்கு இருக்­கிறது. இதுவே, அர­சி­யல் நெருக்­க­டி­களை­யும் தவிர்க்­கும்.
ரிசர்வ் வங்கி, இந்த நேரத்­தில் துணிச்­ச­லான பல முடி­வு­களை எடுத்து வரு­கிறது. வாராக் கடன்­களை அணு­கும் முறை­களில், வங்­கி­களை தீவி­ர­ மாக நிர்ப்­பந்­தித்து வரு­கிறது. மேலும், என்.சி.எல்.டி., என்ற புதிய அமைப்­போடு சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காண, அரசு அதி­வே­க­மாக முனைந்­துள்­ளது. இந்த முயற்­சி­யில் வெளிப்­படும் முன்­ன­கர்­வு­கள் வர­லாறு காணா­தவை.பல வாரா பெருங்­க­டன்­களில் தீர்வு காணும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றங்­கள், பொதுத்­துறை வங்­கி­க­ளுக்கு நெடுங்­கால நன்­மை­களை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.
ஆனால், முத­லீட்­டா­ளர்­களின் சந்­தே­கங்­க­ளை­யும், அச்­சங்­க­ளை­யும் களைய இவை மட்­டுமே போதாது. பொதுத் துறை வங்கி சீர்­தி­ருத்­தத்­திற்­கான அடுத்த கட்­டத்தை உடனே வேகப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது.வங்கி ஊழல் சார்ந்த அவ­சர நட­வ­டிக்­கை­கள், வங்கி இணைப்­பு­கள், தொழில்­நுட்ப சீர்­தி­ருத்­தங்­கள், ஊழி­யர் நேர்மை சார்ந்த நகர்­வு­கள், செலவு குறைப்பு, சொத்து விற்­பனை என, கிட்­டத்­தட்ட ஒரு, ‘டி – 20’ கிரிக்­கெட் ஆட்­டத்­தின் வேகத்­தில் நகர வேண்­டிய நிலை­யில் அரசு உள்­ளது. இதைத் தவிர அர­சுக்கு வேறு வழி­யில்லை.
இத்­த­கைய சூழல், சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு பொருத்­த­மா­னது என்­பதே இந்த நேரத்­தில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஆறு­தல். அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் இணைந்து, அதி­வேக மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தப் போவது உறுதி. அத்­த­கைய சூழ­லில், சந்­தை­யும் அதன் நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ளக் கூடும். இனி வரும் முக்­கிய கொள்கை முடி­வு­களை, சந்தை கூர்ந்து கவ­னிக்­கும். மாற்­றம் வேகம் பிடிக்­கும் தரு­ணம் இது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

மூலக்கதை