பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள்

தினமலர்  தினமலர்
பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள்

பி.பி.எப்., முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நல்ல செய்­தி­யாக, பி.பி.எப்., தொடர்­பான சட்டம் மற்றும் சிறு சேமிப்பு திட்­டங்கள் தொடர்­பான தனித்­தனி சட்­டங்கள் ரத்து செய்­யப்­பட்ட, இவை அனைத்தும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட புதிய சட்­டத்தின் கீழ் கொண்டு வர உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தாக பட்­ஜெட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் படி, பழைய திட்­டத்தில் உள்ள சலு­கைகள், முக்­கிய அம்­சங்கள் புதிய சட்­டத்­திலும் தொடரும் என்­ப­தோடு, புதி­தாக சில பலன்­களும் சாத்­தி­ய­மாக உள்­ளன.தற்­போ­தைய சட்­டத்தின் படி, பி.பி.எப்., கணக்கை துவக்­கிய தினத்தில் இருந்து ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக கணக்கை முடித்­துக் ­கொள்ள வழி­யில்லை. எனினும் புதிய சட்­டத்தில், மருத்­துவ தேவை மற்றும் உயர்­கல்வி போன்ற கார­ணங்­களுக்­காக, பி.பி.எப்., சிறு­சே­மிப்பு திட்ட முத­லீ­டு­களை முன்­ன­தா­கவே விலக்கி கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டலாம்.

தற்­போ­தையை நிலையில், பெற்­றோர் மட்­டுமே மைனர்கள் சார்பில் கணக்கு துவக்க முடியும். தாத்தா, பாட்­டிகள் கூட இவ்­வாறு கணக்கு துவங்க அனு­மதி இல்லை. எனினும் இனி, எந்த ஒரு பாது­கா­வ­லரும் மைனர்கள் பெயரில் பி.பி.எப்., கணக்கு துவங்க அனு­ம­திக்கும் வாய்ப்பு உரு­வாகும். மைனர்கள் கணக்கில் நாமி­னேஷன் வச­தியும் அளிக்­கப்­படும். பி.பி.எப்., மற்றும் சிறு­சே­மிப்பு திட்­டங்­களின் கீழ் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் சிக்­கல்கள் தொடர்­பாக முறை­யீடு செய்து தீர்வு காணும் வசதி அறி­முகம் செய்­யப்­பட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் சார்பில் கணக்கு துவக்­கப்­ப­டவும் தெளி­வாக நெறி­மு­றைகள் வகுக்­கப்­பட உள்­ளன.

மூலக்கதை