மு.க.ஸ்டாலினின் முதல்–அமைச்சர் கனவு என்றைக்கும் நிறைவேறாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
மு.க.ஸ்டாலினின் முதல்–அமைச்சர் கனவு என்றைக்கும் நிறைவேறாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மு.க.ஸ்டாலினின் முதல்–அமைச்சர் கனவு என்றைக்கும் நிறைவேறாது என்றும், 2021–ம் ஆண்டிலும் நாங்கள் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ‘‘அடுத்த 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து டி.ஜெயக்குமார் கூறியதாவது:–
ஆட்சி கலையுமா?

மு.க.ஸ்டாலின் தூங்கி எழுந்தாலே போதும், உடனே இந்த அ.தி.மு.க. அரசு இன்னும் 3 மாதங்கள் தான் ஆட்சியில் இருக்கும் என்பார். அடுத்த 6 மாதங்களாக அதை கூட்டுவார். அடுத்து 9 மாதங்கள், 10 மாதங்கள் என நீண்டுதான் போகும். இதுமட்டும் தான் அவருக்கு தெரியும். இதற்கு மேல் எல்லாமே உங்களுக்கு (பத்திரிகையாளர்களை நோக்கி) தெரிந்திருக்கும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பேற்றவுடன், கவர்னர் உரை கூட சட்டசபையில் ஆற்றிட முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் அது நடந்தது. அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது என்றார், அதையும் செய்து காட்டினோம்.
மாய மனிதன்

தற்போது, அ.தி.மு.க. அரசு 2–வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நேரமும் வந்துவிட்டது. எனவே அடுத்த ஆண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். 2021–ம் ஆண்டும் நாங்கள் தான், அ.தி.மு.க. அரசு தான் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 2021–க்கு பிறகு மீண்டும் மக்களை சந்திப்போம், வெற்றி பெறுவோம். அதற்கு பிறகும் நாங்கள் தான் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்.

எனவே. மு.க.ஸ்டாலின் சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, அவர் ஏதோ ஒரு கனவுலகில் வாழ்வது போல இருக்கிறது. தமிழக முதல்–அமைச்சராக வந்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு எக்காலத்திலும் நிறைவேறப்போவது கிடையாது. கனவுலகில் சஞ்சரிக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை