அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி

தினமலர்  தினமலர்
அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி

நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்குவதற்கு முன் நடிகர் ரஜினியை இன்று, போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், இது நட்பு ரீதியான சந்திப்பு. அரசியல் பயணத்தை துவங்குவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.

கமல் சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியல் பயணத்தை துவக்குவதற்கான அழைப்பிதழை வழங்கவே கமல் வந்தார். கமலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். பணத்திற்காகவோ புகழ்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை. அவரது எல்லா பயணங்களும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். ஆண்டனின் ஆசி கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

அனைவருக்கும் தெரியும் சினிமாவிலேயே என் பாணி தனி. கமல் பாணி தனி. அதே போல் அரசியலிலும் என் பாணி தனியாகத் தான் இருக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்கள் இருவரின் நோக்கம். அது தான் முக்கியம் என்றார்.

மூலக்கதை