தொடர்ச்சியான செல்வாக்கு சரிவில் மக்ரோன்! - பெப்ரவரி மாத கணக்கெடுப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடர்ச்சியான செல்வாக்கு சரிவில் மக்ரோன்!  பெப்ரவரி மாத கணக்கெடுப்பு!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தொடர்ச்சியாக சரிவடைந்து வருகின்றது. பெப்ரவரி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 55 வீதமானோன் மக்ரோனின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெப்ரவரி ஆரம்பத்தில் மக்ரோனின் செல்வாக்கு ஆறு புள்ளிகள் சரிந்துள்ளன. வெறும் 44 புள்ளிகள் செல்வாக்குடன் மட்டுமே தற்போது மக்ரோன் உள்ளார். அதேவேளை பிரதமர் எத்துவா பிலிப்பின் செல்வாக்கு மூன்று புள்ளிகளால் சரிவடைந்துள்ளது. பிலிப் தற்போது 46 புள்ளிகள் செல்வாக்குடன் உள்ளார். Ifop நிறுவனம் எடுத்திருந்த இந்த கணிப்பில் 'ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி / அதிருப்தி அடைகிறீர்களா?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, 5 வீதத்தினர் மட்டும் 'மிகவும் திருப்த்தி' எனவும், 39 வீதத்தின் 'திருப்த்தி' எனவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், 21 வீதத்தினர் 'மிகவும் அதிருப்தி' எனவும், 34 வீதத்தினர் 'அதிருப்தி' எனவும் குறிப்பிட்டுள்ளனர். 1 வீதத்தினர் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கருத்துக்கணிப்பு, பெப்ரவரி 9 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட 1,953 பேர்களிடம் எடுக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை