திருடப்பட்ட ஒரு மில்லியனுக்கு அதிகமான இசை கருவி மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
திருடப்பட்ட ஒரு மில்லியனுக்கு அதிகமான இசை கருவி மீட்பு!!

செந்தனியில் திருடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மில்லியன் யூரோக்கள் பெறுமதியான செல்லோ இசைக்கருவி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த வியாழக்கிழமை செந்தனியின் Pantin பகுதியில் உள்ள, இசைக்கருவியின் உரிமையாளர் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 18 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த செல்லோ இசைக்கருவியின் மதிப்பு, ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என கணிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இசைக்கருவி, தங்கள் வீட்டில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னர் இசைக்கருவி மீட்கப்பட்டுள்ளது. 
 
மகிழுந்து ஒன்றின் பின் இருக்கையில் குறித்த கருவி, நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மூலக்கதை