புதிய சாதனை படைத்த ரோஜர் பெடரர்!

PARIS TAMIL  PARIS TAMIL
புதிய சாதனை படைத்த ரோஜர் பெடரர்!

சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், அதிக வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் நுழைந்துள்ளார்.
 
இதன்மூலம் ATP தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், அதிக வயதில் ATPயில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 
தற்போது 36 வயதாகும் பெடரர், இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு, 33வது வயதில் உலகின் முதல் நிலை வீரராக இருந்த அமெரிக்காவின் ஆண்ட்ரே அகசியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மூலக்கதை