அமேதியின் அடையாளம் ஊறுகாய் : ஸ்மிருதி இரானி பெருமிதம்

தினமலர்  தினமலர்
அமேதியின் அடையாளம் ஊறுகாய் : ஸ்மிருதி இரானி பெருமிதம்

அமேதி: உ.பி.,யில், காங்., தலைவரும், எம்.பி.,யுமான ராகுலை அடையாளமாகக் கொண்டிருந்த, அமேதி தொகுதிக்கு மற்றொரு அடையாளமாக, 'அமேதி ஊறுகாய்' விரைவில் இடம் பெறும் என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில், காங்., தலைவர், ராகுல் போட்டியிட்டு வென்றார்.

அமேதி தொகுதி குறித்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்மிருதி இரானி கூறியதாவது:உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில், 2017 ஏப்ரலில், பிரதமர் திறன் மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டது. இந்த மையத்தில், பெண்களுக்கு, ஊறுகாய் தயாரிப்பு மற்றும், 'பேக்கிங்' தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.தற்போது, பயிற்சியை முடித்த பெண்கள், தங்கள் வீடுகளில் ஊறுகாய் தயாரித்து, 'பேக்கிங்' செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரலில், 'அமேதி ஊறுகாய்' விற்பனை துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை