ஜோகன்னஸ்பர்கில் இன்று முதல் டி20 போட்டி

தினகரன்  தினகரன்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 5-1 என வென்று சாதனை படைத்தது.அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இதிலும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.டுமினி தலைமையில் களமிறங்கும் தென் ஆப்ரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் அந்த அணி வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதி சந்தேகமில்லை.* இரு அணிகளும் மோதியுள்ள சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா 6-2 என முன்னிலை வகிக்கிறது. * இதுவரை 100 டி20ல் விளையாடி உள்ள தென் ஆப்ரிக்கா 59 வெற்றி, 40 தோல்வி கண்டுள்ளது. * சர்வதேச டி20ல் 2000 ரன் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற கோஹ்லிக்கு இன்னும் 43 ரன் தேவை.இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், ரெய்னா, மணிஷ் பாண்டே, டோனி, ஹர்திக், தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், பூம்ரா, புவனேஷ்வர், குல்தீப், சாஹல், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்காட்.தென் ஆப்ரிக்கா: ஜே.பி.டுமினி (கேப்டன்), பர்கான் பெகார்டியன், ஜூனியர் டாலா, டி வில்லியர்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜாங்க்கர், ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பெலுக்வாயோ, டாப்ரைஸ் ஷம்சி, ஜான் ஜான் ஸ்மட்ஸ்.

மூலக்கதை