கிரீன் கார்டு' மசோதாவில் அமெரிக்க எம்.பி., திருத்தம்

தினமலர்  தினமலர்
கிரீன் கார்டு மசோதாவில் அமெரிக்க எம்.பி., திருத்தம்

வாஷிங்டன்தகுதியின் அடிப்படையில், 'கிரீன் கார்டு' எனப்படும் குடியுரிமையை அளிக்கும் அமெரிக்க அரசின் மசோதாவை வலுப்படுத்தும் வகையில், சில திருத்தங்களை, ஒரு எம்.பி., கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, 'கிரீன் கார்டு' எனப்படும், நிரந்தர குடியுரிமை வழங்க உள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
குலுக்கல் முறையில் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என, மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் அதிக அளவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த மசோதாவை வலுப்படுத்தும் வகையில், சில திருத்தங்களை, எம்.பி., ஓர்ரின் ஹாட்ச் கொண்டு வந்துள்ளார்.'கிரீன் கார்டுக்காக காத்திருக்கும்போது, வேறு வேலைக்கு மாறுவதை அனுமதிக்க வேண்டும். அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள படிப்பை முடித்தவர்களுக்கு, கிரீன் கார்டுக்காக காத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
'அமெரிக்காவில் வேலை பார்ப்பவரின் மனைவி அல்லது கணவருக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை' உள்ளிட்ட திருத்தங்களை, அவர் கொண்டு வந்துள்ளார்.

மூலக்கதை