பசுமை வாகனத்திற்கு முக்கியத்துவம் தேசிய வாகன கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு

தினமலர்  தினமலர்
பசுமை வாகனத்திற்கு முக்கியத்துவம் தேசிய வாகன கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு

புதுடில்லி : மத்­திய கன­ரக தொழில் துறை, தேசிய வாகன கொள்­கை­யின் வரைவு அறிக்­கையை வெளி­ யிட்டுள்­ளது. பசுமை வாக­னங்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள, இந்த வரைவு அறிக்கை குறித்து, பொது­மக்­கள் கருத்து கூற­லாம் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வரைவு அறிக்­கை­யில் இடம் பெற்­றுள்ள முக்­கிய அம்­சங்­கள்:
l வரும், 2023 முதல், மத்­திய, மாநில அர­சு­களின் வாகன கொள்­மு­த­லில், குறைந்­த­பட்­சம், 25 சத­வீ­தம், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மாசு இல்­லாத பசுமை வாக­னங்­கள் இடம் பெற வேண்­டும். இது, 2030ல், 75 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட வேண்­டும்

l இதே காலத்­தில், மாந­க­ராட்­சி­களின் பசுமை வாகன கொள்­மு­தல், முறையே, 50 சத­வீ­தம் மற்­றும், 100 சத­வீ­த­மாக இருக்க வேண்­டும்

l வாகன துறை சார்ந்த பொறி­யி­யல் சாத­னங்­கள், புதிய தொழில்­நுட்ப உப­க­ர­ணங்­களை தயா­ரிக்­கும் இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­மதி வரி குறைக்­கப்­பட வேண்­டும்

l பசுமை வாகன தயா­ரிப்பு சார்ந்த தொழில்­நுட்ப உத­வியை பெறு­வ­தற்கு வச­தி­யாக, தொழில்­நுட்ப கொள்­மு­தல் நிதி­யம் அமைக்க வேண்­டும்

l இந்­திய வாகன ஏற்­று­ம­திக்கு, அதிக வாய்ப்­புள்ள நாடு­க­ளு­டன், வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்ள, தேவை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும்

l அனைத்து பசுமை வாக­னங்­களின் மொத்த கொள்­மு­த­லுக்கு, மத்­திய அர­சின், GeM வலை­தள சந்­தையை பயன்­ப­டுத்­த­லாம்

l பொது போக்­கு­வ­ரத்­திற்­கான, பசுமை வாக­னங்­க­ளுக்கு தேவைப்­படும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் குறித்து, விரி­வான ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும்

l பசுமை வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், ஒவ்­வொரு நிதி­யாண்­டின் துவக்­கத்­தி­லும், இறக்­கு­மதி செய்ய உள்ள, மாதிரி வாக­னங்­களின் எண்­ணிக்­கையை முன்­கூட்­டியே தெரி­வித்­தால் மட்­டுமே, சுங்க வரி விலக்கு அளிக்­கப்­படும்

l பசுமை வாகன துறை­யில், பணி­யா­ளர்­க­ளுக்கு திறன் மேம்­பாடு மற்­றும் பயிற்சி திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்­டும்

l தொழி­லா­ளர் சந்தை தக­வல் திட்­டத்தை செயல்­ப­டுத்தி, தகு­தி­யான தொழி­லா­ளர்­க­ளுக்­கும், அத்­த­கை­யோரை தேடும் வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடையே, பால­மாக செயல்­ப­ட­லாம். இத­னால், இத்­து­றை­யில் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்

l பசுமை வாகன ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு திட்­டங்­களில், அர­சு­டன், தனி­யார் இணைந்து மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, ஊக்­கச்­ச­லுகை வழங்க­லாம்

l ‘இந்­திய முத­லீடு’ திட்­டத்­து­டன் இணைந்து, வாக­னத் துறை­யில், குறிப்­பிட்ட பிரி­வு­களில், அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்­டும்

l இந்­தி­யா­வில் பசுமை வாக­னங்­கள் தயா­ரிப்பு, பயன்­பாடு ஆகி­ய­வற்றை அதி­க­ரிக்க, ஊக்­கச்­ச­லு­கை­கள், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் ஆகி­ய­வற்றை மேற்­கொள்ள வேண்­டும்.

இதற்கு, நீண்ட கால அடிப்­ப­டை­யில், உறு­தி­யான செயல் திட்­டங்­களை வகுப்­பது அவ­சி­யம்.

இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை