பி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்பு

தினமலர்  தினமலர்
பி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்பு

கோல்கட்டா : ‘‘பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், வைர வியா­பாரி, நிரவ் மோடி­யின் மோசடி கார­ண­மாக, தங்­கம் மற்­றும் நவ­ரத்­தி­னங்­கள் துறை­யில், சிறி­த­ளவு பாதிப்பு ஏற்­படும்,’’ என, ஜி.ஜே.இ.பி., கிழக்கு பிராந்­திய தலை­வர், பிர­காஷ் சந்­திர பின்ச்சா தெரி­வித்து உள்­ளார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது:பி.என்.பி.,யில் நடை­பெற்ற, 11,400 கோடி ரூபாய் மோச­டி­யால், தங்­கம் மற்­றும் நவ­ரத்­தி­னங்­கள் துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, கடன் கொடுக்க வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் தயங்­கும் அல்­லது மேற்­கொண்டு கடன் கொடுப்­பதை தாம­தப்­ப­டுத்­தும்.அத­னால், இத்­து­றை­யில் கடன் புழக்­கம் குறை­யும். அதே சம­யம், இப்­பி­ரச்­னை­யால், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் தங்க ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி உட்­பட,ஒட்­டு­மொத்த துறை­யும்பாதிக்கப்பட வாய்ப்­பு இல்லை.வங்­கி­கள் மட்­டு­மின்றி, காப்­பீட்டு நிறு­வ­னங்­களும், நகை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு காப்­பீட்டு சேவை வழங்­கு­வ­தில், இனி எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும். ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளி­டம், கூடு­த­லாக பிணைப் பத்­தி­ரங்­களை வழங்­கு­மாறு, வங்­கி­கள் கேட்­க­லாம்.இந்த மோச­டி­யால், ஒட்டு மொத்­த­மாக, தங்­கம் மற்­றும் நவ­ரத்­தி­னங்­கள் துறை, அதிக இடர்ப்­பாட்டு துறை என, முத்­திரை குத்­தப்­ப­ட­லாம். அது போன்ற நிலை ஏற்­ப­டக் கூடாது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை