அன்னிய ஆடவர்களிடம் வளையல் அணிய தடை

தினமலர்  தினமலர்
அன்னிய ஆடவர்களிடம் வளையல் அணிய தடை

புதுடில்லி:'அன்னிய ஆடவர்களிடம், வளையல் அணிந்து கொள்ளக் கூடாது; திருமணம் போன்ற விழாக்களில், ஆடவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது' என, முஸ்லிம் பெண்களுக்கு, தாருல் உலும் தேவ்பந்த் எனப்படும், முஸ்லிம் அமைப்பு, 'பத்வா' எனும் தடை விதித்துள்ளது.

உ.பி., மாநிலம், சஹாரன்பூரில் இயங்கும், தாருல் உலும் தேவ்பந்த் எனும் இஸ்லாமிய அமைப்பு, பல்வேறு பிரச்னைகளுக்கு மத அடிப்படையில், 'பத்வா' எனும் தடையை விதிக்கிறது.முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், இறுக்கமான, டிசைனர் பர்தா அணிவதற்கும், ஆடவர் விளையாடும் கால்பந்து போட்டிகளை காணவும், இந்த அமைப்பு, ஏற்கனவே தடை விதித்துள்ளது.தற்போது, விழாக்களின் போது வளையல் விற்கும் அன்னிய ஆடவரிடம், முஸ்லிம் பெண்கள், கைகளை கொடுத்து வளையல் அணியவும், திருமணம் போன்ற விழாக்களில் நடக்கும் விருந்தில், அன்னிய ஆடவருடன் அமர்ந்து உணவு உண்ணவும், இந்த அமைப்பு தடை விதித்துள்ளது.

மூலக்கதை