அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை மத்திய வங்கி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 
 
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மற்றும் ஏற்றுமதியாளர்களின் டொலர் தேவை காரணமாக இந்த வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 156.66 ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இவ்வாறு டொலர் பெறுமதி வீழ்ச்சிடைவதனை காண முடிந்துள்ளது.
 
இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவாரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 1.1 வீதம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
 
கடந்த வருடம் ரூபாய் நூற்றுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ள, நிலையில், 2016ஆம் ஆண்டு நூற்றுக்கு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை