எலிசே மாளிகையில் சமையல் அறை! - பிரிஜித் மக்ரோனின் புதிய ஆசை!!

PARIS TAMIL  PARIS TAMIL
எலிசே மாளிகையில் சமையல் அறை!  பிரிஜித் மக்ரோனின் புதிய ஆசை!!

ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் சமையல் அறை ஒன்றை அமைக்க முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
எலிசே மாளிகை ஒவ்வொரு ஜனாதிபதிகளும் மாறும் போது, தங்களுக்கு பிடித்தால் போல் சில சில மாற்றங்களை கொண்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்வான இம்மானுவல் மக்ரோன் சில புகழ்பெற்ற ஓவியங்களை எலிசே மாளிகையில் வைத்தார். அதே போல் தற்போது, எலிசேயில் மிக நவீனமான சமையல் அறை ஒன்றை அமைப்பதற்கு பிரிஜித் மக்ரோன் ஆசைப்படுவதாகவும், சாப்பாடுகளை தாமே சமைத்து சாப்பிட விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தவிர, விரைவில் எலிசே மாளிகையில் சமையலறை அமைப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாவும் வெள்ளை மாளிகையில் சமையலறை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை