பங்கு ஒதுக்கீட்டில் பாதிப்பா: இழப்பீடு தர, ‘செபி’ உத்தரவு

தினமலர்  தினமலர்
பங்கு ஒதுக்கீட்டில் பாதிப்பா: இழப்பீடு தர, ‘செபி’ உத்தரவு

புதுடில்லி : ‘பங்கு வெளி­யீட்­டில், தகுதி உள்ள சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு, பங்கு ஒதுக்­கீடு செய்­யா­விட்­டால், தவ­றுக்கு கார­ண­மான வணிக வங்கி, இழப்­பீடு வழங்க வேண்­டும்’ என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ தெரி­வித்து உள்­ளது.

சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள் தொடர்­பாக, ‘செபி’ வெளி­யிட்­டுள்ள புதிய விதி­மு­றை­கள்: பங்கு வெளி­யீட்­டில், சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு, தகுதி இருந்­தும் பங்கு ஒதுக்­கீடு செய்­யா­விட்­டால், பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் வணிக வங்­கி­கள் இழப்­பீடு தர வேண்­டும்

* பங்­கு­களை ஒதுக்க தவ­றி­ய­தால், முத­லீட்­டா­ள­ருக்கு பறி­போன வாய்ப்பு; பங்கு ஒதுக்கி இருந்­தால், பட்­டி­யல் நாளன்று கிடைத்­தி­ருக்க கூடிய லாபம் என்­பது உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், இழப்­பீடு நிர்­ண­யிக்க வேண்­டும்

* பங்கு விண்­ணப்­பங்­கள், 90 – 100 சத­வீ­தத்­திற்­குள் இருந்­தால், அதா­வது, நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தற்கு மேலாக விண்­ணப்­பங்­கள் வர­வில்­லை­யென்­றால், சில்­லரை முத­லீட்­டா­ள­ருக்கு ஒதுக்கி இருக்­கக் கூடிய பங்­கு­க­ளுக்கு, இழப்­பீடு தர வேண்­டும்

* பட்­டி­யல் நாளன்று, வெளி­யீட்டு விலையை விட, பங்கு விலை குறைந்­தால், இழப்­பீடு தர தேவை­யில்லை

* பங்கு விண்­ணப்­பத்­து­டன் செலுத்­தும் தொகை, பங்கு ஒதுக்­கீடு வரை, முத­லீட்­டா­ளர் கணக்கு வைத்­துள்ள வங்­கி­யின் பொறுப்­பில் இருக்­கும். இதில், வங்கி செய்­யும் தவ­றால், பங்கு ஒதுக்­கீடு பெற முடி­யாத சில்­லரை முத­லீட்­டா­ளர்­கள், மூன்று மாதங்­க­ளுக்கு உள்­ளாக, வங்­கி­யில் புகார் தெரி­விக்­க­லாம்

* வங்கி, 15 நாட்­க­ளுக்­குள் புகா­ருக்கு தீர்வு காண வேண்­டும். தவ­றி­னால், ஆண்­டுக்கு, 15 சத­வீத வட்­டி­யு­டன் வழங்க வேண்­டும்

* பங்கு ஒதுக்­கீடு தொடர்­பாக, நிலு­வை­யில் உள்ள புகார்­கள் அனைத்­திற்­கும், ‘செபி’யின், SCORES வலை­த­ளம் அல்­லது இதர வகை­யில், வங்­கி­கள் உட­ன­டி­யாக தீர்வு காண வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை