1,000 நிறுவனங்கள் பாதிக்கப்படும்; ரப்பர் தொழில் துறையினர் கோரிக்கை

தினமலர்  தினமலர்
1,000 நிறுவனங்கள் பாதிக்கப்படும்; ரப்பர் தொழில் துறையினர் கோரிக்கை

மும்பை : ‘ரப்­பர் பொருட்­கள் உற்­பத்­திக்கு அவ­சி­ய­மான, ‘கார்­பன் பிளாக்’ மூலப்­பொ­ருள் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, அதிக பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்­டும்’ என, இந்­திய ரப்­பர் தொழில் துறை கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.

இது குறித்து, இந்த கூட்­ட­மைப்­பின் மூத்த துணைத் தலை­வர், விக்­ரம் மாகர் கூறி­ய­தா­வது: சீனா, ரஷ்யா மற்­றும் சில நாடு­களில் இருந்து, இறக்­கு­மதி செய்­யப்­படும், ‘கார்­பன் பிளாக்’ பொருட்­க­ளுக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத­னால், அவற்­றின் விலை உயர்ந்து, உள்­நாட்­டில் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், ரப்­பர் பொருட்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள, 1,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மூடப்­படும் நிலை­யில் உள்ளன.

இதன் கார­ண­மாக, 2 லட்­சத்­திற்­கும் மேற்­பட்­டோர், வேலை­வாய்ப்பை இழப்­பர். மேலும், இத்­து­றை­யில் மாதந்­தோ­றும், 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும். கார்­பன் பிளாக் பொரு­ளின் விலை, ஆறு மாதங்­களில், 60 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இதில், மூன்று மாதங்­களில் மட்­டும், 30 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

கார்­பன் பிளாக் பொருள், ரசா­ய­னம், பெயின்ட் உள்­ளிட்ட பல்­வேறு தொழிற்­சா­லை­களில், மிக அதி­க­ள­வில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மூலக்கதை