இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பம் விதிமுறைகள் வெளியிட அரசு திட்டம்

தினமலர்  தினமலர்
இந்தியாவில், ‘5ஜி’ தொழில்நுட்பம் விதிமுறைகள் வெளியிட அரசு திட்டம்

புதுடில்லி : ‘‘நாட்­டில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்­தில், தொலை தொடர்பு சேவை தொடர்­பான விதி­மு­றை­கள், ஜூன் மாதத்­திற்­குள் வெளி­யா­கும்,’’ என, தொலை தொடர்பு துறை செய­லர், அருணா சுந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது: உல­க­ள­வில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்­தில், தொலை தொடர்பு சேவைக்­கான தர நிர்­ணய விதி­களை உரு­வாக்­கும் பணி, இந்­தாண்­டுக்­குள் முடி­வ­டை­யும். இந்­தி­யா­வில், ‘5ஜி’ சேவைக்­கான கொள்கை விதி­மு­றை­களை உரு­வாக்க, உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. அதன் அறிக்கை, ஜூன் மாதத்­திற்­குள் கிடைக்­கும் என, தெரி­கிறது.

இதன் மூலம், உல­க­ள­வில், ‘5ஜி’ சேவை, வர்த்­தக ரீதி­யில் துவங்­கும் போது, இந்­தி­யா­வும், அடுத்த தலை­முறை தொழில்­நுட்­பத்தை சுல­ப­மாக பின்­பற்­றும். இயந்­தி­ரங்­கள் இடை­யி­லான தொலை தொடர்பு வச­திக்கு, புதிய, ‘சிம்’ எண்­களை உரு­வாக்­கும் பணி நடக்­கிறது.

ஸ்மார்ட் போனில், ‘5ஜி’ தொழில்­நுட்ப சேவை மூலம், இயந்­தி­ரங்­கள் இடை­யி­லான தொலை தொடர்பு வசதி பர­வ­லா­கும். ‘ஸ்மார்ட் வீடு­கள், ஸ்மார்ட் நக­ரங்­கள்’ ஆகி­ய­வற்­றுக்கு, இத்­தொ­ழில்­நுட்­பம் பயன்­படும். ‘சென்­சார்’ பயன்­பாடு கார­ண­மாக, கார் மற்­றும் இதர வாக­னங்­கள் விபத்­தில் சிக்­கு­வது தவிர்க்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை