எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டு விலை

தினமலர்  தினமலர்
எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் பங்கு வெளியீட்டு விலை

புதுடில்லி : எச்.ஜி., இன்ப்ரா இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 426 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.

இப்­பங்கு வெளி­யீடு, 26ல் துவங்கி, 28ல் முடி­வ­டை­கிறது. ஒரு பங்­கின் குறைந்­த­பட்ச விலை, 263 ரூபாய்; அதி­க­பட்ச விலை, 270 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டப்­படும் தொகை, பொறி­யி­யல் சாத­னங்­கள் வாங்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும், இதர வர்த்­தக செயல்­பா­டு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­படும்’ என, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இப்­பங்கு வெளி­யீட்டை, எஸ்.பி.ஐ., கேப்­பி­டல் மார்க்­கெட்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி ஆகி­யவை நிர்­ண­யிக்­கின்றன.முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட பங்­கு­கள், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும்.

எச்.ஜி., இன்ப்ரா இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம், அடிப்­படை கட்­ட­மைப்பு துறை சார்ந்த கட்­டு­மா­னம், மேம்­பாடு மற்­றும் நிர்­வா­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. சாலை­கள், மேம்­பா­லங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் கட்­டு­மான பணி­யில் ஈடு­பட்டு வரும் இந்­நி­று­வ­னம், சில ஆண்­டு­க­ளுக்கு முன், நீர் குழாய் பதிப்பு பணி­யி­லும் கால் பதித்­துள்­ளது.

மூலக்கதை