மத்திய அரசு பட்ஜெட்டில்... நிதி பற்றாக்குறை இலக்கு குறைப்புக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

தினமலர்  தினமலர்
மத்திய அரசு பட்ஜெட்டில்... நிதி பற்றாக்குறை இலக்கு குறைப்புக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

வாஷிங்டன் : ‘நிதி பற்­றாக்­கு­றையை குறைத்து, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­லும் நோக்­கில், மத்­திய அர­சின், 2018 – 19ம் நிதி­யாண்டு பட்­ஜெட் அமைந்­துள்­ளது’ என, பன்­னாட்டு நிதி­யம் பாராட்டு தெரி­வித்து உள்­ளது.

இது குறித்து, பன்­னாட்டு நிதி­யத்­தின் தக­வல் தொடர்பு துறை இயக்­கு­னர், கெரி ரைஸ் கூறி­ய­தா­வது: மத்­திய அர­சின், 2018 – 19ம் நிதி­யாண்டு பட்­ஜெட் இலக்­கு­களும், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 3.3 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்ள, நிதி பற்­றாக்­குறை இலக்­கும், வர­வேற்­கத்­தக்­கது.

பொரு­ளா­தார வளர்ச்­சியை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­யில், துவக்க கட்­டத்­தில், இந்­தியா உள்­ளது. இதற்கு ஆத­ர­வா­க­வும், நிதி­யா­தா­ரத்தை மேலும் வலுப்­ப­டுத்­தும் நோக்­கி­லும், பட்­ஜெட் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. கடந்த ஆண்டை விட, நடப்­பாண்டு நிதி பற்­றாக்­குறை குறைக்­கப்­பட வேண்­டும் என, பன்­னாட்டு நிதி­யம், ஏற்­க­னவே வலி­யு­றுத்தி உள்­ளது. அதை பிர­தி­ப­லிக்­கும் வகை­யில், வரும் நிதி­யாண்­டில் நிதி பற்­றாக்­குறை இலக்கு, 3.3 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.

பரி­வர்த்­த­னை­களின் மதிப்பை விட, வரி வரு­வாய் அதி­க­ரிக்­கும் என்­பதை பட்­ஜெட் உணர்த்­து­கிறது. அவ்­வாறு நடை­பெற்­றால், மக்­களின் நுகர்­வி­லும், வரு­மா­னத்­தி­லும் மாற்­றம் ஏது­மின்றி, அதி­க­ள­வில் வரி வரு­வாயை, அரசு ஈட்ட முடி­யும். அதே சம­யம், 2017ல் அறி­மு­க­மான, ஜி.எஸ்.டி.,யில், நடை­முறை சிக்­கல்­கள் இன்­னும் நீடித்து வரு­வ­தை­யும் கவ­னிக்க வேண்­டும். இந்­நிலை தொடர்ந்­தால், மத்­திய அர­சின் வரி வசூல், பட்­ஜெட் இலக்கை விட குறை­ய­வும் வாய்ப்பு உள்­ளது.

பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்ட சில திட்­டங்­க­ளுக்கு, நிதி ஒதுக்­கப்­ப­டா­மல் உள்­ளது. இதில், மத்­திய அர­சின் நிலை முழு­வ­து­மாக தெரிந்த பின் தான், கருத்து கூற முடி­யும்.விவ­சா­யி­களின் விளை பொருட்­க­ளுக்கு, உற்­பத்­திச் செலவை விட, ஒன்­றரை மடங்கு அதி­க­மாக, குறைந்­த­பட்ச ஆதார விலை நிர்­ண­யிக்­கப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. புதிய தேசிய காப்­பீட்டு திட்­டத்­தின் கீழ், 50 கோடி பேருக்கு, ஆண்­டுக்கு, 5 லட்­சம் ரூபாய் வரை, மருத்­து­வக் காப்­பீட்டு வசதி அளிக்­கப்­படும் என­வும், பட்­ஜெட் தெரி­விக்­கிறது. இத்­த­கைய, புதிய கொள்கை திட்­டங்­க­ளால், வரு­வாய் பற்­றாக்­கு­றையோ அல்­லது அதிக நிதி ஒதுக்­கீடோ தேவைப்­ப­ட­லாம்.

இதன் கார­ண­மாக, மத்­திய அர­சின் வழக்­க­மான திட்­டச் செல­வி­னங்­கள் குறை­யும். இந்த பட்­ஜெட், கிரா­மப்­புற மேம்­பாடு, சமூக நலன் ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்­தி­னா­லும், அவற்­றுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் அதிக மாற்­றம் இல்லை.

மத்­திய அரசு, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின் நிதி பற்­றாக்­குறை இலக்கை, 3.2 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தி­ருந்­தது. இது தற்­போது, 3.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

மதிப்பீடு:
இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, நடப்­பாண்டு, 7.4 சத­வீ­த­மா­க­வும், 2019ல், 7.8 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும்.
-பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார ஆய்வறிக்கை

மூலக்கதை