வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டது..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டது..

 

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் 'கந்திற்பாவை', 'கொரிய வளமும் தமிழ் உறவும்' ஆகிய இரு நூல்களும் 02/14/2018 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டன.   இவ்விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன், நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். புலவர் பதுமனார் அவர்களும், திருப்பூர் கே.பி.கே.செல்வராசு அவர்களும் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மேலும் திருவாளர்கள் கவிஞர் அப்துல்காதர், சுகுமாரன், ஐயா முத்துக்குமாரசாமி, கவாலியர்.மதிவாணன், எழுத்துச்சிற்பி.சிதம்பரபாரதி, முனைவர் அண்ணாகண்ணன், செ.ரா.சுப்பிரமணியம், சிவானந்தம், டாக்டர்.ஜீவானந்தம், ஈரோடு தங்க.விசுவநாதன், கவிஞர்.தமிழன் ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். இவ்விரு நூல்களை பழனியப்பா பதிப்பகத்தார் பதிப்பித்தனர்..  வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்  உரையாற்றும்போது  கொரியாவிற்குக் கொங்கு நாட்டிலிருந்து எப்படி ஒரு தமிழ் ராணி சென்றார் என இன்னும் விரிவாக ஆராய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நூலாசிரியர்  பவளசங்கரி கொரியாவுக்கும் சென்று ஆராய்ந்து வரலாம் என்றார்.  திரு.அண்ணாக்கண்ணன் உரையாற்றும்போது கொரிய வம்சாவழியினருக்கும் தமிழ் மக்களுக்கும் மரபணுச் சோதனை (DNA test) நடத்த வேண்டும். அதன் மூலம் கொரிய ராணியின் நதிமூலத்தை அறிவியல்பூர்வமாகக் கண்டறிய முடியும் என்று குறிப்பிட்டார். 

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் 'கந்திற்பாவை', 'கொரிய வளமும் தமிழ் உறவும்' ஆகிய இரு நூல்களும் 02/14/2018 அன்று ஈரோட்டில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டன.   இவ்விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன், நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். புலவர் பதுமனார் அவர்களும், திருப்பூர் கே.பி.கே.செல்வராசு அவர்களும் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மேலும் திருவாளர்கள் கவிஞர் அப்துல்காதர், சுகுமாரன், ஐயா முத்துக்குமாரசாமி, கவாலியர்.மதிவாணன், எழுத்துச்சிற்பி.சிதம்பரபாரதி, முனைவர் அண்ணாகண்ணன், செ.ரா.சுப்பிரமணியம், சிவானந்தம், டாக்டர்.ஜீவானந்தம், ஈரோடு தங்க.விசுவநாதன், கவிஞர்.தமிழன் ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். இவ்விரு நூல்களை பழனியப்பா பதிப்பகத்தார் பதிப்பித்தனர்.. 


வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர்  உரையாற்றும்போது  கொரியாவிற்குக் கொங்கு நாட்டிலிருந்து எப்படி ஒரு தமிழ் ராணி சென்றார் என இன்னும் விரிவாக ஆராய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நூலாசிரியர்  பவளசங்கரி கொரியாவுக்கும் சென்று ஆராய்ந்து வரலாம் என்றார். 


திரு.அண்ணாக்கண்ணன் உரையாற்றும்போது கொரிய வம்சாவழியினருக்கும் தமிழ் மக்களுக்கும் மரபணுச் சோதனை (DNA test) நடத்த வேண்டும். அதன் மூலம் கொரிய ராணியின் நதிமூலத்தை அறிவியல்பூர்வமாகக் கண்டறிய முடியும் என்று குறிப்பிட்டார். 

 

மூலக்கதை