நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

தினகரன்  தினகரன்

ஆக்லாந்து : நியூ நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதும்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மார்ட்டின் குப்டில் மற்றும் கொலின் மன்ரோ சிறப்பான துவக்கம் தந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சை துவம்சம் செய்த குப்டில், மன்ரோ ஜோடி 10.4 ஓவர்களில் 132 ரன்களை குவித்தது. மன்ரோ 33 பந்துகளில் 76ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான குப்டில் சதமடித்து 105ரன்கள் குவித்தார். 20ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 243 ரன்களை குவித்துள்ளது.244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி18.5ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 245 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும்  ஆர்சி ஷார்ட் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். கலக்கலாக ஆடிய இந்த ஜோடி 7.1ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய வார்னர் 24 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்சி ஷார்ட் 44 பந்துகளில் 76 ரன்களை குவித்தார்.  மேலும் ஆரோன் பிஞ்ச் 14 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு உதவினார்.

மூலக்கதை