தொடரை வெல்லுமா ஆப்கானிஸ்தான்? தடுமாறும் சிம்பாப்வே!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரை வெல்லுமா ஆப்கானிஸ்தான்? தடுமாறும் சிம்பாப்வே!

சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
 
சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும் சிம்பாப்வே அணிக்கு கிரேம் கிறீமரும் தலைமைதாங்குகின்றனர்.
 
ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இருபோட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியும், சிம்பாப்வே அணி ஒருபோட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
 
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற ஆப்கானிஸ்தான் அணியும், தொடரின் தோல்வியை தவிர்க்க சிம்பாப்வே அணியும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

மூலக்கதை