தேசிய கால்பந்தில் சாம்பியன் : வரலாறு படைத்தது தமிழக மகளிர் அணி

தினகரன்  தினகரன்

கட்டாக்: தேசிய கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை முதல் முறையாக வென்று தமிழக மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது.மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசாவின் கட்டாக்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் தமிழகம், மணிப்பூர் அணிகள் மோதின. இப்போட்டியில் தமிழக வீராங்கனைகள் அபாரமாக ஆடினர். அணியின் நட்சத்திர வீராங்கனையான இந்துமதி 3வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்திராணி 40வது நிமிடத்தில் 2வது கோல் அடித்தார். மணிப்பூர் தரப்பில் ரதன்பாலா 57வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.இதன் மூலம் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதுவரை தமிழக ஆண்கள் அணி கூட தேசிய சாம்பியன்ஷிப் தொடரான சந்தோஷ் கோப்பையை வென்றதில்லை. கடலூரைச் சேர்ந்தவரான இந்துமதி இத்தொடரில் 10 கோல் அடித்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர் தமிழக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

மூலக்கதை