ரியல் மாட்ரிட் அணிக்காக 100வது கோல் அடித்து சாதித்தார் ரொனால்டோ

தினகரன்  தினகரன்

மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக 100வது  கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கான முதல்கட்ட ஆட்டங்கள் நடந்து வருகின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும், பிஎஸ்ஜி அணியும் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அட்டகாசமாக ஆடினார். இவர் 45வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பையும், 83வது நிமிடத்திலும் 2 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும், ஒரே தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக 100வது கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்தார்.

மூலக்கதை