வார இறுதிநாட்களில் RER B இரத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
வார இறுதிநாட்களில் RER B இரத்து!!

பாடசாலை விடுமுறை காலத்தின் போது, இரு வாரங்களுக்கு வார இறுதிநாட்களில் (சனி, ஞாயிறு) RER B இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் 17, 18 ஆம் திகதிகளிலும் 24, 25 ஆம் திகதிகளில்  ஓல்னே-சூ-புவா (Aulnay-sous-Bois) இல் இருந்து சாள்-து-கோல் விமானநிலையம் வரை இயங்கும் RER B இரத்துச்செய்யபட்டுள்ளது. குறித்த இடைபட்ட தூரத்துக்கு மிகப்பெரிய தண்டவாள மீள் நிர்மான பணிகள் இடம்பெற இருப்பதால் இந்த சேவை தடைபட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. 
 
தொடரூந்துக்கு பதிலாக Mitry-Claye இல் இருந்து சாள்-து-கோல் விமானநிலையத்துக்கு சிறப்பு  பேரூந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. காலை 5 மணியில் இருந்து ஒவ்வொரு பத்தாவது நிமிடத்துக்கும் ஒருதடவை பேரூந்துக்கள் இயக்கப்பட உள்ளன. 

மூலக்கதை