கைப்பற்றப்பட்ட மிகப்பெரும் ஆயுத கிடங்கு! - 488 ஆயுதங்கள், 100 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
கைப்பற்றப்பட்ட மிகப்பெரும் ஆயுத கிடங்கு!  488 ஆயுதங்கள், 100 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு!!

Boulogne-sur-Mer இல் மிகப்பெரும் ஆயுதக்கிடங்கு ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 488 க்கும் குறையாத ஆயுதங்கள், 100 கிலோ எடையுள்ள வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி, சுங்கவரித்துறையினர் ஆயுதம் ஒன்று கடத்தப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த ஆயுதம் கடத்தப்பட்ட மகிழுந்தை பின் தொடர்ந்ததில், ஒரு வீடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஆயுதங்கள் விற்பனை செய்யும் அதிகாரியின் வீடு ஒன்றில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்களை விற்பனை செய்வதற்குரிய அனுமதிக்காலம் நிறைவுற்ற நிலையில், சட்சவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கப்பட்டு கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்படு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 
 
சுங்கவரித்துறையினரோடு அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், அனைத்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், கிட்டத்தட்ட அனைத்துவித ஆயுதங்களும் இருந்துள்ளது. துப்பாக்கிச்சூடு  விளையாட்டு வீரர்களுக்கு அனுமதியோடு விற்பனை செய்யப்பட்டதாக கணக்குக்காட்டப்பட்ட ஆயுதங்களே இவை என தெரியவந்துள்ளது. 
 

மூலக்கதை